வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: நொடி..!

Friday, November 20, 2009

நொடி..!

நீ மணி முள்ளாக
இருந்தால் நான்
நொடி முள்ளாகவே
இருக்க ஆசைப்படுகிறேன்...
அப்பொழுதுதானே
நிமிடத்திற்கு ஒருமுறை
உன்னைச் சந்திக்கமுடியும்..!

-சே.குமார்
2 comments:

மோகனன் said...

//நீ மணி முள்ளாக
இருந்தால் நான்
நொடி முள்ளாகவே
இருக்க ஆசைப்படுகிறேன்...
அப்பொழுதுதானே
நொடிக்கு ஒருமுறை
உன்னைச் சந்திக்கமுடியும்..//

நல்லாருக்கு.. ஆனால் சிறு பொருள் குற்றம் இருப்பதாக என் சிற்றறிவு சொல்கிறது...

மணி முள்ளை, நொடி முள்... ஒரு நிமிடத்திற்கு ஒரு முறைதான் சந்திக்கும்...

ஒரு நொடியில் மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்தால் ஓடாத கடிகாரம் என்றாகி விடும் தோழரே...

கவியருமை... வாழ்த்துகள்...

சே.குமார் said...

நன்றி நண்பரே...

சுட்டியமைக்கு நன்றி நண்பரே. மாற்றுகிறேன்.

அடிக்கடி வாருங்கள். உள்ளம் திறந்து சொல்லுங்கள். உங்கள் வாழ்த்தால் வளர்கிறேன்.