வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: August 2009

Wednesday, August 26, 2009

சிறை

அடிமைச் சிறை
அவதிப்பட்டது...
கூண்டுக்கிளி..
 
-சே.குமார்
பரியன்வயல்
ஊனமான நொடி

உனக்காக காத்திருந்த
பொழுதுகளில்
ஊனமானது நொடிமுள்..!
 
-சே.குமார்
பரியன்வயல்
ஆபத்து

அழகு ஆபத்து...
சிறகிழந்தது
வண்ணத்துப் பூச்சி..! 
 
-சே.குமார்
பரியன்வயல்
ஆலமரமாய்...

மறக்க முயன்றும்
மறக்க முடியவில்லை...
மனசுக்குள் ஆலமரமாய்...
முதல் காதல்..!
 
 
-சே.குமார்
பரியன்வயல்
Tuesday, August 25, 2009

காதல் 'தீ'

ஊருக்குள் நாம்
உரசிக்கொள்வது கூட
இல்லை - எப்படியோ
பற்றிக்கொண்டது நம்
காதல் 'தீ'...!

-சே.குமார்
பரியன்வயல்
Monday, August 24, 2009

ஊனம்

ஊனம்-
பேருந்தில் அருகில்
நின்ற பாட்டிக்கு
இடம் தர மறுத்தது
மனசு..!


-சே.குமார்
பரியன்வயல்
Sunday, August 23, 2009

காதல் நாட்கள்

காதலே நீ...
பேசிச் சென்ற
நாட்களைவிட...
பேசாமல் கொன்ற
நாட்களே அதிகம்...!
 
 
சே.குமார்
பரியன் வயல்
Thursday, August 20, 2009

இதய இம்சை