வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: காதல்
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, December 8, 2009

உனக்காக...

உனக்குப் பிடிக்கும்
என்பதால் வழியெங்கும்
ரோஜா - எனது
இறுதி ஊர்வலம்..!



Sunday, November 29, 2009

கடைசி பயணம்

மண்ணிற்குள் உடல்...
அழும் உறவுகள்..!
காசுக்காக காத்திருக்கும்
வெட்டியான்..!
-சே.குமார்




Saturday, November 28, 2009

காதல்

ஓடி வந்து பேருந்தில்
ஏறினாய் நீ..!
பயத்தில் நகம்
கடித்தேன் நான்..!
மனசுக்குள்
தெய்வங்கள்..!

-சே.குமார்




Tuesday, November 24, 2009

ஞாபகமாய்..!

ஞாபக மறதியாய்
நீ விட்டுச் சென்ற
பேனா...
ஞாபகமாய்
என் பாக்கெட்டில்..!

-சே.குமார்




Sunday, November 22, 2009

சங்கமம்

உனக்கும் எனக்குமான
சந்திப்பில் சங்கமிப்பது
என்னவோ கண்கள்தான்
இருந்தும் படபடக்குது
மனசு..!

-சே.குமார்




Saturday, November 21, 2009

கனம்

உன் அழைப்புக்காக
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது
கையிலிருக்கும்
செல்போன்..!

-சே.குமார்




பயணம்

மனதிற்குள் பயமிருந்தாலும்
சுகமாய்த்தான் இருந்தது
துப்பட்டாவால் முகம்
மறைத்து உன்னுடன்
நிகழ்ந்த பயணம்..!

-சே.குமார்




Friday, November 20, 2009

நொடி..!

நீ மணி முள்ளாக
இருந்தால் நான்
நொடி முள்ளாகவே
இருக்க ஆசைப்படுகிறேன்...
அப்பொழுதுதானே
நிமிடத்திற்கு ஒருமுறை
உன்னைச் சந்திக்கமுடியும்..!

-சே.குமார்




மௌனம்

நீ மௌனத்தால்
கொல்லாதே...
எனக்கு மௌனத்தை
கொல்வது எப்படி
என்று தெரியாது பெண்ணே...!



Wednesday, November 18, 2009

திரும்பாமல்...

நீ திரும்பிச் சிரிக்கும்
ஒற்றைச் சிரிப்புக்காக
திரும்பாமல் தவித்தது
மனசு..!

-சே.குமார்




தடை

சிறுநீர் கழிக்க
தடையாக
சுவரெங்கும்
சாமி படங்கள்..!

-சே.குமார்




புன்னகை

உன் புன்னகையால்
நொறுங்கியது
என் இதயமல்ல...
இன்பம்..!

-சே.குமார்




Saturday, November 14, 2009

பட்டிமன்றம்

நீ சூடியதால்
பூ அழகா..?
பூச் சூடியதால்
நீ அழகா..?
என்னுள்ளே
பட்டிமன்றம்..!

-சே.குமார்




Wednesday, November 11, 2009

குளியல்

அருவித் தண்ணியோ..!
குளத்துத் தண்ணியோ..!
சுகம் என்னவோ...
உன் கைபட்ட
குழாய் தண்ணீர்
குளியலில்தான்..!

-சே.குமார்




Saturday, November 7, 2009

பூ..!

மலரும்போதே
மனசுக்குள்...
சாமிக்கா..?
சாவுக்கா..?

(சில வருடங்களுக்கு முன் பாக்யா இதழில் வெளியான படத்திற்கு எழுதப்பட்டு தேர்வான மூன்று ஹைக்கூ கவிதைகளில் இதுவும் ஒன்று. நன்றி பாக்யா)

-சே. குமார்




Friday, November 6, 2009

விவாகரத்து

ஒத்துப்போகாத
மனங்களின்
ஒருமித்த முடிவு...!

-சே.குமார்




அலை

ஆர்ப்பரிக்கும் அலை...
குதூகலமாய் சிறுமி..!
குடும்ப சண்டைக்குள்
நிம்மதி இழந்த பெற்றோர்..!

-சே.குமார்




Wednesday, November 4, 2009

ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்...
நெல்லுக்காக
கூண்டைவிட்டு
வெளியே வந்தது
கிளி..!

-சே.குமார்




திருமணம்

கோலாகலமாய்
திருமணம்..!
சமையல் மேஸ்திரி
மனதில் சங்கடம்...
முதிர்கன்னியாய் மகள்..!

-சே.குமார்




ஊர்வலம்

மாட்டின்மேல்
ஊர்வலமாய்...
மனித மாடுகள்..!

-சே.குமார்