வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: நெஞ்சு பொறுக்குதில்லையே...

Wednesday, February 10, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே...

நெற்றி நிறைய பொட்டு...
தலை நிறைய மல்லிகை...
வீடெங்கும் தலைகள்...
கூடத்தில் தாலி அறுக்கும்
வைபோக ஏற்பாடுகள்..!

-சே.குமார்
11 comments:

ஷங்கர்.. said...

மிக கொடுமையான நிகழ்வுங்க அது. நான் வெறுப்பதில் இதுவும் ஒன்று,,:(

கண்ணகி said...

தூக்குத்தண்டனை கைதி..

சி. கருணாகரசு said...

நச்!!!
நெற்றி பொட்டில் அடித்தாற்போல்!!!

நிலாமதி said...

இந்தக்காலத்திலும் இது இருக்குதாங்க ......என்ன கொடுமை சார்.......எவ்வளவு இதய வலி...தாலியை அறுத்தாலும் அவள் உள்ளத்தில் வாழ்கிறானே. இதயத்தை திறந்தா காட்ட் முடியும் .

சே.குமார் said...

ஆம் ஷங்கர், இதை நானும் மிகவும் வெறுக்கிறேன்.

சே.குமார் said...

ஆம் கண்ணகி, உங்கள் கருத்து மிகவும் சரி.

சே.குமார் said...

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சி.கருணாகரசு.

சே.குமார் said...

இன்னும் இந்த நிகழ்வு இருக்கத்தான் செய்கிறது நிலாமதி, இது ஒழிய வாய்ப்பு இல்லை என்பதே வேதனைதான்.

கமலேஷ் said...

ரொம்ப வலியோடு இருக்கிறது இந்த வரிகள்....பழைய பதிவில் காய்ந்த கல் மிக அர்த்தமுள்ள அருமையான கவிதை...மிகவும் பிடித்திருந்தது ...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

சே.குமார் said...

என்ன கமலேஷ் ரொம்ப நாளா காணோம். பதிவும் இடவில்லை. என்னாச்சு. உங்களது கருத்துக்கள்தான் எனக்கு உற்சாக டானிக். அடிக்கடி வாங்க. கருத்துக்கு நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

நிறையக் கவிதைகளைப் படித்தேன். அருமை