அன்பான நட்புககு
நாளை மாலை நாற்பது நாள் விடுமுறையில் ஊருக்குப் போகிறேன்... அதற்காக கடந்த ஒரு வாரத்தில் அலுவலக பணிகள் அதிகம் செய்து வைக்க வேண்டிய நிலை. அதனால்தான் நண்பர்களுக்கு பின்னூட்டம் இடவோ, எனது பிளாக்கில் பதிவிடவோ முடியாத சூழல். இனி நாற்பது நாட்களும் என்னால் வலைக்குள் வரமுடியுமா என்பது தெரியவில்லை. நான் விடுமுறைக்கு விண்ணப்பித்து, கிடைத்த நாள் முதல் என் வரவை நாட்காட்டியில் மே-20 என்ற இடத்தை அம்மாவிடம் காட்டஸ் சொல்லி கலர் பென்சிலால் வட்டங்கள் இட்டு காத்திருக்கும் என் தங்கம் (ஸ்ருதி). ஒரு வருடமே ஆனாலும் என் முகம் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் மழலையாய் அலைபேசியில் 'அ..ஆப்பா' என்றழைத்து முத்தமிடும் என் செல்லம் (விஷால்) , மற்றும் எனக்காக வாழும் என் அன்பு மனைவி இவர்களுடன் நாட்களை சந்தோசமாய் நிறைக்க இருப்பதால் வலைக்குள் வருவேன்... அடிக்கடி என்பது இயலாத காரியம். அப்பொழுது கண்டிப்பாக பின்னூட்டம் இடுவேன்.
அதுவரை பின்னூட்டம் இடுகிறேன் என்று படுத்தவோ.... பதிவிடுகிறேன் என்று உங்களை வதைக்கவோ செய்ய மாட்டேன் என்பதால் உங்கள் சந்தோஷத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
என்னைத் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் 919659976250 என்ற எண்ணில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடியிலும் தேவகோட்டையிலும் தான் அதிக நாட்கள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
பாசங்களுடன்,
சே.குமார்.
7 comments:
nallapadiya ooruku poitu vaanga. kudumbathoda naatkalai selvaiduunga. pathivbulgam ungalukkaga kaathirukkum nanbare.
happy and safe journey
//அம்மாவிடம் காட்டஸ் சொல்லி கலர் பென்சிலால் வட்டங்கள் இட்டு காத்திருக்கும் என் தங்கம் (ஸ்ருதி). ஒரு வருடமே ஆனாலும் என் முகம் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் மழலையாய் அலைபேசியில் 'அ..ஆப்பா' என்றழைத்து முத்தமிடும் என் செல்லம் (விஷால்) ,//
வலைய வீசி போட்டுட்டு குடும்பத்தோட சந்தோஷமா இருங்க குமார். :))
ஹாப்பி ஹாலிடேஸ்..!
Have a safe and fun vacation!
Convey our regards to your family. :-)
சந்தோஷமா ஊருக்கு போயிட்டு வாங்க....
பயணம் இனிதாக வாழ்த்துகள் நண்பரே
நீங்க போயிட்டு வாங்க தலைவரே... குடும்பத்தோட சந்தோஷமா இந்த 40 நாளும் அனுபவிங்க... பிளாக் பக்கமெல்லாம் அப்பறமா வரலாம்....
வாழ்த்துக்கள்....
happy journey!!
Post a Comment