வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: September 2009

Monday, September 21, 2009

வாத்துக் கூட்டம்

வற்றிய வயலில்
வாத்துக் கூட்டம்...
மணலில் விளையாடும்
குழந்தைகள்..!


-சே.குமார்
பரியன் வயல்




Tuesday, September 8, 2009

மனசுக்குள்...

உன்னைக்கண்டதும் என்னுள்ளே
ஏதோ ஒரு மாற்றம்...
மறுதலித்தேன் மனசுக்குள்...
அக்காவின் காதலால்
அவமானப்பட்ட பெற்றோர்..!


-சே.குமார்
பரியன்வயல்.




நிழற்குடை

மந்திரியின் வரவுக்காக
காத்திருக்கும் நிழற்குடை...
வெயிலில் மக்கள்..!

-சே.குமார்
 பரியன்வயல்.