வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: 2009

Saturday, December 26, 2009

பிரிவு

ஆடுவெட்டிப் பூஜை
அமர்க்களமாய்...
வீட்டில் தாயை
தேடி அலையும் குட்டி..!

-சே.குமார்




Friday, December 25, 2009

தாலாட்டு..!

தாலாட்டு..!
சந்தோஷ தூக்கம்
குழந்தைக்கு...
பழைய நினைவுகளை
திரும்பிப் பார்த்த
சோகத்தில் தாய்..!

-சே.குமார்




Tuesday, December 22, 2009

பயணம்

மணிக்கணக்கில்
பேசினாலும் மனதிற்குள்..
இறங்கும் இடம்
தேடும் பயணம்..!



Thursday, December 17, 2009

கொலுசொலி..!

தெருவில் நீ போவதை
என் காதில் வந்து
சொல்லிச் சென்றது
கொலுசொலி..!

-சே.குமார்




Wednesday, December 16, 2009

எதிர் எதிரே...

சாமி ஊர்வலமும்
சவ ஊர்வலமும்
எதிர் எதிரே...
சிரித்துக் கொண்டன
பூக்கள்..!



Sunday, December 13, 2009

பசி

ஊர்வலமாய் அம்மன்
எரியப்பட்டது காசு..!
வயிற்றுப்பசியுடன்
வயோதிகர்..!

-சே.குமார்




Saturday, December 12, 2009

காணவில்லை

நேற்று முதல் காற்றைக்
காணவில்லை..!
வீழ்ந்து கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

-சே.குமார்




Friday, December 11, 2009

பயன்

வீட்டிற்கு ஒரு
மரம் வளர்ப்போம்...
நாங்களும் வளர்க்கிறோம்...
இதுவரை பயன் தராத
இரண்டு மகன்களை..!

-சே.குமார்




Wednesday, December 9, 2009

கல்லறைகள்

எதிர்ப்பின்றி
பேசி சிரித்தோம்...
எதிர் எதிரே
நம் கல்லறைகள்..!

-சே.குமார்




Tuesday, December 8, 2009

உனக்காக...

உனக்குப் பிடிக்கும்
என்பதால் வழியெங்கும்
ரோஜா - எனது
இறுதி ஊர்வலம்..!



Sunday, December 6, 2009

தள்ளுபடி

ஆடித் தள்ளுபடி..!
அவசரமாக
வாங்கப்பட்டது
வட்டியில்லாக் கடன்..!

-சே.குமார்




Saturday, December 5, 2009

சுதந்திரம்

சுதந்திரம் வேண்டி
மாட்டின் மேல்
ஊர்வலம்..!
எங்கே போனது
சுதந்திரம்..?
-சே.குமார்




Sunday, November 29, 2009

கடைசி பயணம்

மண்ணிற்குள் உடல்...
அழும் உறவுகள்..!
காசுக்காக காத்திருக்கும்
வெட்டியான்..!
-சே.குமார்




Saturday, November 28, 2009

காதல்

ஓடி வந்து பேருந்தில்
ஏறினாய் நீ..!
பயத்தில் நகம்
கடித்தேன் நான்..!
மனசுக்குள்
தெய்வங்கள்..!

-சே.குமார்




Wednesday, November 25, 2009

நிலாப் பெண்

நிலாப் பெண்ணே நீ...
வளர்ந்து தேய்ந்தாலும்
தேய்ந்து வளர்ந்தாலும்
மூன்றாம் பிறையில்
அழகிய குழந்தை..!
பெளர்ணமியிலோ
உலக அழகி..!

(கிறுக்கல்களில் இது 50வது ஹைக்கூ. வலைத்தளத்தில் இது 78வது படைப்பு. இந்த நேரத்தில் என்னை எழுத்தாளனாக்கி சந்தோஷப்பட்ட எனது கல்வித் தந்தையும் பேராசிரியருமான திரு. மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கும் எனது எழுத்துக்களை படித்து என்னை ஊக்கப்படுத்திய உள்ளம் இன்று சில காரணங்களால் விரிசல் விட்டிருந்தாலும் என்றும் எனக்குள் இருக்கும் நண்பர் பேராசிரியர் கரு.முருகன் அவர்களுக்கும் இக்கவிதையை காணிக்கையாக்குகிறேன். - சே.குமார்)




Tuesday, November 24, 2009

ஞாபகமாய்..!

ஞாபக மறதியாய்
நீ விட்டுச் சென்ற
பேனா...
ஞாபகமாய்
என் பாக்கெட்டில்..!

-சே.குமார்




Sunday, November 22, 2009

சங்கமம்

உனக்கும் எனக்குமான
சந்திப்பில் சங்கமிப்பது
என்னவோ கண்கள்தான்
இருந்தும் படபடக்குது
மனசு..!

-சே.குமார்




Saturday, November 21, 2009

கனம்

உன் அழைப்புக்காக
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது
கையிலிருக்கும்
செல்போன்..!

-சே.குமார்




பயணம்

மனதிற்குள் பயமிருந்தாலும்
சுகமாய்த்தான் இருந்தது
துப்பட்டாவால் முகம்
மறைத்து உன்னுடன்
நிகழ்ந்த பயணம்..!

-சே.குமார்




Friday, November 20, 2009

நொடி..!

நீ மணி முள்ளாக
இருந்தால் நான்
நொடி முள்ளாகவே
இருக்க ஆசைப்படுகிறேன்...
அப்பொழுதுதானே
நிமிடத்திற்கு ஒருமுறை
உன்னைச் சந்திக்கமுடியும்..!

-சே.குமார்




மௌனம்

நீ மௌனத்தால்
கொல்லாதே...
எனக்கு மௌனத்தை
கொல்வது எப்படி
என்று தெரியாது பெண்ணே...!



Wednesday, November 18, 2009

திரும்பாமல்...

நீ திரும்பிச் சிரிக்கும்
ஒற்றைச் சிரிப்புக்காக
திரும்பாமல் தவித்தது
மனசு..!

-சே.குமார்




தடை

சிறுநீர் கழிக்க
தடையாக
சுவரெங்கும்
சாமி படங்கள்..!

-சே.குமார்




புன்னகை

உன் புன்னகையால்
நொறுங்கியது
என் இதயமல்ல...
இன்பம்..!

-சே.குமார்




Saturday, November 14, 2009

பட்டிமன்றம்

நீ சூடியதால்
பூ அழகா..?
பூச் சூடியதால்
நீ அழகா..?
என்னுள்ளே
பட்டிமன்றம்..!

-சே.குமார்




Wednesday, November 11, 2009

குளியல்

அருவித் தண்ணியோ..!
குளத்துத் தண்ணியோ..!
சுகம் என்னவோ...
உன் கைபட்ட
குழாய் தண்ணீர்
குளியலில்தான்..!

-சே.குமார்




விளை நிலம்

விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..!

-சே.குமார்




Saturday, November 7, 2009

பூ..!

மலரும்போதே
மனசுக்குள்...
சாமிக்கா..?
சாவுக்கா..?

(சில வருடங்களுக்கு முன் பாக்யா இதழில் வெளியான படத்திற்கு எழுதப்பட்டு தேர்வான மூன்று ஹைக்கூ கவிதைகளில் இதுவும் ஒன்று. நன்றி பாக்யா)

-சே. குமார்




Friday, November 6, 2009

விவாகரத்து

ஒத்துப்போகாத
மனங்களின்
ஒருமித்த முடிவு...!

-சே.குமார்




அலை

ஆர்ப்பரிக்கும் அலை...
குதூகலமாய் சிறுமி..!
குடும்ப சண்டைக்குள்
நிம்மதி இழந்த பெற்றோர்..!

-சே.குமார்




Wednesday, November 4, 2009

ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்...
நெல்லுக்காக
கூண்டைவிட்டு
வெளியே வந்தது
கிளி..!

-சே.குமார்




திருமணம்

கோலாகலமாய்
திருமணம்..!
சமையல் மேஸ்திரி
மனதில் சங்கடம்...
முதிர்கன்னியாய் மகள்..!

-சே.குமார்




ஊர்வலம்

மாட்டின்மேல்
ஊர்வலமாய்...
மனித மாடுகள்..!

-சே.குமார்




Sunday, November 1, 2009

அழைக்காமலே

ஆயிரம் முறை அழைத்தும்
வராத காகம்...
அழைக்காமலே வந்தது...
அப்பாவுக்கு திவசம்..!

-சே.குமார்




துணை

துணைக்கு வருவாயா
தூறலே...
வெயிலில் என்னவள்..!

-சே.குமார்




அப்பா

அப்பா கொடுத்த
காசு பத்திரமாய்...
காசு கொடுத்த அப்பா..?

-சே.குமார்




Saturday, October 31, 2009

பாகுபாடு

மரணத்திலும் உன்னோடு...
ஜாதி காட்டிப் பிரித்த
சமூகம் சடலங்களிலும்
பாகுபாடு பார்ப்பதேன்..?

-சே.குமார்




மழை

மழையோடு விளையாட்டு...
நாளை காய்ச்சல் வரலாம்..!
மழை மீண்டும் வருமா..?

-சே.குமார்




Friday, October 30, 2009

வேஷங்கள்

தேடும் தெய்வங்கள்
தெருவினில்...
வயிற்றுப்பிழைப்புக்காக
வேஷங்கள்..!

-சே.குமார்




Wednesday, October 28, 2009

மரியாதை

மாலை மரியாதை...
மல்லுக்கு நிற்கிறது
சாமி முன் சமூகம்..!

-சே.குமார்
(கிறுக்கிய சில நாட்களில் இது 25-வது படைப்பு...)




Monday, October 26, 2009

விதவை

கூடை நிறைய ரோஜா...
சுமந்துவரும் பெண்ணிற்கோ
பொட்டிழந்த நெற்றி..!

-சே.குமார்




மனசு

மழைக்கு ஒதுங்கினோம்
நிழற்குடையில்...
ஏனோ விலகமறுத்தது
மனசு..!

-சே.குமார்




கடிதம்

எப்போதோ நீ
கொடுத்த ஒற்றைவரி
கடிதம் என்னுள் பத்திரமாய்..!
பதில் அனுப்பாமலே..!

-சே.குமார்




Sunday, October 25, 2009

டம்ளர்

நீ நீரருந்திய
டம்ளரை நான்
யாரையும் பயன்படுத்த
விடுவதில்லை...
என்னைத் தவிர..!

-சே.குமார்




களங்கம்

நிலவுக்கும் கடலுக்கும்
சண்டையோ..?
தன்னுள் மிதக்கும்
நிலவை களங்கப்படுத்தியது
அலை..!

-சே.குமார்




Saturday, October 24, 2009

பூ

நீ பூத்தது அறியாமல்
உன் வீட்டு வாசலில்
பூக்களோடு நான்..!

-சே.குமார்




இழந்த அமைதி

எந்த ஒரு
முடிவுக்குப் பின்னும்
அமைதி ஏற்படுவதுண்டு...
அப்படி இருக்க
நம் காதல்
முறிவுக்குப்பின்
அமைதி இழந்தது
ஏன் பெண்ணே..?

-சே.குமார்




Monday, October 19, 2009

இருட்டு

சாமி ஊர்வலம்...
விளக்கு ஏந்தி வந்தவன்
வெளியில் நிறுத்தப்பட்டான்...
தாழ்ந்த சாதியாம்...!
வெளிச்சத்தில் வந்த
சாமியும் இருட்டுக்குள்...!

-சே.குமார்




மனசுக்குள்

கோவில் வாசலில் நீ..!
அழைக்க நினைத்தபோது
கால்களை கட்டிக்கொண்டது
குழந்தை..!

-சே.குமார்




Monday, October 12, 2009

பூஜை

சாமிக்கு பூஜை
விதவிதமாய் மலர்கள்...
வாசலில் பூத்த்துக்கிடந்தது
அரளி..!


-சே.குமார்
பரியன் வயல்




கர்வம்

கோபுரங்களில் குடியிருப்பு
கர்வப்பட்டது
புறா..!


-சே.குமார்
பரியன் வயல்




Saturday, October 3, 2009

முகச்சுருக்கம்

அழகாய் தெரிந்தது
அனுபவத்தின் ஆழம்...
முகச்சுருக்கம்..!


-சே.குமார்
பரியன் வயல்




ஆபத்து

அருவிக் குளியல்
ஆபத்தானது...
தலைகீழாக குதித்த
நீர்க்காகம் தண்ணீரோடு...!


-சே.குமார்
பரியன் வயல்




Monday, September 21, 2009

வாத்துக் கூட்டம்

வற்றிய வயலில்
வாத்துக் கூட்டம்...
மணலில் விளையாடும்
குழந்தைகள்..!


-சே.குமார்
பரியன் வயல்




Tuesday, September 8, 2009

மனசுக்குள்...

உன்னைக்கண்டதும் என்னுள்ளே
ஏதோ ஒரு மாற்றம்...
மறுதலித்தேன் மனசுக்குள்...
அக்காவின் காதலால்
அவமானப்பட்ட பெற்றோர்..!


-சே.குமார்
பரியன்வயல்.




நிழற்குடை

மந்திரியின் வரவுக்காக
காத்திருக்கும் நிழற்குடை...
வெயிலில் மக்கள்..!

-சே.குமார்
 பரியன்வயல்.




Wednesday, August 26, 2009

சிறை

அடிமைச் சிறை
அவதிப்பட்டது...
கூண்டுக்கிளி..
 
-சே.குமார்
பரியன்வயல்




ஊனமான நொடி

உனக்காக காத்திருந்த
பொழுதுகளில்
ஊனமானது நொடிமுள்..!
 
-சே.குமார்
பரியன்வயல்




ஆபத்து

அழகு ஆபத்து...
சிறகிழந்தது
வண்ணத்துப் பூச்சி..! 
 
-சே.குமார்
பரியன்வயல்




ஆலமரமாய்...

மறக்க முயன்றும்
மறக்க முடியவில்லை...
மனசுக்குள் ஆலமரமாய்...
முதல் காதல்..!
 
 
-சே.குமார்
பரியன்வயல்




Tuesday, August 25, 2009

காதல் 'தீ'

ஊருக்குள் நாம்
உரசிக்கொள்வது கூட
இல்லை - எப்படியோ
பற்றிக்கொண்டது நம்
காதல் 'தீ'...!

-சே.குமார்
பரியன்வயல்




Monday, August 24, 2009

ஊனம்

ஊனம்-
பேருந்தில் அருகில்
நின்ற பாட்டிக்கு
இடம் தர மறுத்தது
மனசு..!


-சே.குமார்
பரியன்வயல்




Sunday, August 23, 2009

காதல் நாட்கள்

காதலே நீ...
பேசிச் சென்ற
நாட்களைவிட...
பேசாமல் கொன்ற
நாட்களே அதிகம்...!
 
 
சே.குமார்
பரியன் வயல்




Thursday, August 20, 2009

இதய இம்சை