வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: October 2009

Saturday, October 31, 2009

பாகுபாடு

மரணத்திலும் உன்னோடு...
ஜாதி காட்டிப் பிரித்த
சமூகம் சடலங்களிலும்
பாகுபாடு பார்ப்பதேன்..?

-சே.குமார்




மழை

மழையோடு விளையாட்டு...
நாளை காய்ச்சல் வரலாம்..!
மழை மீண்டும் வருமா..?

-சே.குமார்




Friday, October 30, 2009

வேஷங்கள்

தேடும் தெய்வங்கள்
தெருவினில்...
வயிற்றுப்பிழைப்புக்காக
வேஷங்கள்..!

-சே.குமார்




Wednesday, October 28, 2009

மரியாதை

மாலை மரியாதை...
மல்லுக்கு நிற்கிறது
சாமி முன் சமூகம்..!

-சே.குமார்
(கிறுக்கிய சில நாட்களில் இது 25-வது படைப்பு...)




Monday, October 26, 2009

விதவை

கூடை நிறைய ரோஜா...
சுமந்துவரும் பெண்ணிற்கோ
பொட்டிழந்த நெற்றி..!

-சே.குமார்




மனசு

மழைக்கு ஒதுங்கினோம்
நிழற்குடையில்...
ஏனோ விலகமறுத்தது
மனசு..!

-சே.குமார்




கடிதம்

எப்போதோ நீ
கொடுத்த ஒற்றைவரி
கடிதம் என்னுள் பத்திரமாய்..!
பதில் அனுப்பாமலே..!

-சே.குமார்




Sunday, October 25, 2009

டம்ளர்

நீ நீரருந்திய
டம்ளரை நான்
யாரையும் பயன்படுத்த
விடுவதில்லை...
என்னைத் தவிர..!

-சே.குமார்




களங்கம்

நிலவுக்கும் கடலுக்கும்
சண்டையோ..?
தன்னுள் மிதக்கும்
நிலவை களங்கப்படுத்தியது
அலை..!

-சே.குமார்




Saturday, October 24, 2009

பூ

நீ பூத்தது அறியாமல்
உன் வீட்டு வாசலில்
பூக்களோடு நான்..!

-சே.குமார்




இழந்த அமைதி

எந்த ஒரு
முடிவுக்குப் பின்னும்
அமைதி ஏற்படுவதுண்டு...
அப்படி இருக்க
நம் காதல்
முறிவுக்குப்பின்
அமைதி இழந்தது
ஏன் பெண்ணே..?

-சே.குமார்




Monday, October 19, 2009

இருட்டு

சாமி ஊர்வலம்...
விளக்கு ஏந்தி வந்தவன்
வெளியில் நிறுத்தப்பட்டான்...
தாழ்ந்த சாதியாம்...!
வெளிச்சத்தில் வந்த
சாமியும் இருட்டுக்குள்...!

-சே.குமார்




மனசுக்குள்

கோவில் வாசலில் நீ..!
அழைக்க நினைத்தபோது
கால்களை கட்டிக்கொண்டது
குழந்தை..!

-சே.குமார்




Monday, October 12, 2009

பூஜை

சாமிக்கு பூஜை
விதவிதமாய் மலர்கள்...
வாசலில் பூத்த்துக்கிடந்தது
அரளி..!


-சே.குமார்
பரியன் வயல்




கர்வம்

கோபுரங்களில் குடியிருப்பு
கர்வப்பட்டது
புறா..!


-சே.குமார்
பரியன் வயல்




Saturday, October 3, 2009

முகச்சுருக்கம்

அழகாய் தெரிந்தது
அனுபவத்தின் ஆழம்...
முகச்சுருக்கம்..!


-சே.குமார்
பரியன் வயல்




ஆபத்து

அருவிக் குளியல்
ஆபத்தானது...
தலைகீழாக குதித்த
நீர்க்காகம் தண்ணீரோடு...!


-சே.குமார்
பரியன் வயல்