வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

Tuesday, June 29, 2010

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

என்ன எல்லாரும் நல்லாயிருக்கீங்களா...? பார்த்து பல நாளாச்சு..? எப்படியிருக்கீங்க..? ஊருக்குப் பொயிட்டு வந்து ரெண்டு நாள் ஆயாச்சு... வேலைக்குப் போனாலும் வேலை ஓடலைங்க... மனைவி, குழந்தைகளின் கஷ்டம் போனிலும்... மனக்கண்ணிலும்...

பிளாக்கில் எழுதவோ, உங்கள் எழுத்துக்களை படிக்கவோ நினைக்கும் மனநிலை எனக்குள் இன்னும் வரவில்லை. இருந்தும் ஒரு சிலரின் எழுத்துக்களை படித்து பின்னூட்டமிட்டேன். பலரை படிக்கவில்லை.

மன ஓட்டத்தை காரைக்குடியில் இருந்து அபுதாபிக்கு மாற்ற சில நாட்கள் ஆகலாம். நான் வரும்போது என்னிடம் அழுத மனைவியையும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறிய என் மகளும்... இன்று மாலை கூட அப்பா... வா...ப்பா என்று மழலையாய் போனில் அழைக்கும் என் ஒன்றரை வயது மகனின் குரலும் எனக்குள் தனிமையில் அழுகையை வெளிப்படுத்தினாலும் உங்கள் ஆக்கங்கள் என் மனபாரத்தை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் என்னையே நினைத்து இருக்கும் மூன்று ஜீவன் களுக்கும் என் பேச்சு மட்டுமே ஆறுதல்...

அவர்களின் பாரம் கரையும் நேரத்தில் எனக்கு ஓராண்டு முடிந்து மீண்டும் விடுமுறை கிடைக்கும்.

ஓகே நண்பர்களே... நண்பர் நாடோடி இலக்கியன் தொடர்பதிவுக்கு அழத்திருக்கிறார். விரைவில் எழுதுகிறேன் நண்பரே... அப்புறம் இன்னொன்னு இப்ப எங்க புராஜெக்ட் அரசு அலுவலகத்தில்.

எனவே நான் சில நாட்களுக்கு அபுதாபியில் இருந்து 50கிமீ பயணித்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். மாலை ஆறுமணிக்கு வரும்போது சோர்வும் கூட வருகிறது.

நான்கு வலையையும் ஒன்றாய் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணத்தை எனக்கு பின்னூட்டமிடவும். தொடரும் நாட்களில் தொடரும் என் எழுத்து... நன்றிகள் பல...

நட்புடன்
சே.குமார்.





10 comments:

Ramesh said...

வாங்க குமார், வரவேண்டும். எழுத்துக்களாலே எழுதிப்போடுங்க ஆயுத முனையை விட எழுத்துக்களின் சக்தி அதிகம் அல்லவா. பிரிந்து வந்ததாய் கனவு காணாதீர்கள். இணையம் தொலைத்தொடர்பு வசதிகள் உங்கள் தூரம் குறைக்கும். ஆனாலும் வேதனைகளின் வெளிப்பாடு கிறுக்கல்களாகட்டும்.
தொலைதூரம் போனால் என்ன பாசம் தூரத்தில் போயிடுமா தூர்ந்து போயிடுமா

Chitra said...

Welcome back!

வீட்டை எப்படி மறக்க முடியும்? அவர்கள் எப்பொழுதும் உங்கள் நினைவில்..... ஊர் போய் விட்டு வந்ததும், homesickness பல நாட்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

Blogspot உங்க பேட்டை... கலக்குங்க!

எல்லாம் செட்டில் ஆனப்புறம், கடை பக்கம் வாங்க..... :-)

Anonymous said...

வாங்க குமார் சார் ..மனைவியேயும் பசங்களேயும் விட்டு வந்த அந்த துக்கம் எனக்கு புரியறது ஆனா என்ன செய்ய வேலைக்கு போயி தான் ஆகனம் இல்லையா ...தினமும் அவங்க கிட்டே பேசி மனம் தேத்திக்கோ பா ..

மங்குனி அமைச்சர் said...

தனிமையில் அழுகையை வெளிப்படுத்தினாலும் உங்கள் ஆக்கங்கள் என் மனபாரத்தை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.///


வாங்க வாங்க சார், நாம விளையாடுவோம் நாளையும் ஒன்னகிடுங்க

அன்புடன் மலிக்கா said...

தனிமையில் அழுகையை வெளிப்படுத்தினாலும் உங்கள் ஆக்கங்கள் என் மனபாரத்தை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.//

அழறபோது அழது சிரிக்கும்போது சிரித்து கூடவே வருவதுதானே நட்பு அது இந்த வலைப்பூக்களில் மிகுதியே!
கவலையை விடுங்கள் அடிச்சி ஆடுங்க!

ஸ்டாட் மியூசிக்..

Madumitha said...

படிக்கும் போதே மனசு வலிக்கிறது.
நிறைய எழுதுங்கள்.

ராம்ஜி_யாஹூ said...

welcome back.

Really Google & Yahoo helps a lot to the NRI to pass their times

Priya said...

குடும்பத்தை விட்டு பிரிந்து பணி புரியும் உங்க கஷ்டம் புரிகிறது.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் பேசி சந்தோஷம் கொள்ளுங்கள் குமார்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

காரைக்குடி உங்க சொந்த ஊரா சகோ! ஊருக்குப்போறேன் பதிவில் பார்த்தேன். பிறகு நீங்கள் வந்ததும் கேட்க நினைத்ததை இப்போது கேட்கிறேன்.
அப்புறம் எல்லோருக்குமே ஊருக்குப்போயிட்டு வந்தா ஊர் ஞாபகம் இருக்கும்.அதுவும் நீங்கள் மனைவி,மக்களைப்பிரிந்திருப்பது கஷ்டம் தான். அவுங்க நல்லாருக்கனும்கிறதுக்காக நீங்க செய்ற வேள்வியா நினச்சுக்கங்க! பெருமையா இருக்கும். துக்கம் வரவே வராது. (எப்புடி பெரிய பின்னூட்டம்?)

'பரிவை' சே.குமார் said...

@க.நா.சாந்தி லெட்சுமணன். said...
//காரைக்குடி உங்க சொந்த ஊரா சகோ! ஊருக்குப்போறேன் பதிவில் பார்த்தேன். பிறகு நீங்கள் வந்ததும் கேட்க நினைத்ததை இப்போது கேட்கிறேன்.
அப்புறம் எல்லோருக்குமே ஊருக்குப்போயிட்டு வந்தா ஊர் ஞாபகம் இருக்கும்.அதுவும் நீங்கள் மனைவி,மக்களைப்பிரிந்திருப்பது கஷ்டம் தான். அவுங்க நல்லாருக்கனும்கிறதுக்காக நீங்க செய்ற வேள்வியா நினச்சுக்கங்க! பெருமையா இருக்கும். துக்கம் வரவே வராது. (எப்புடி பெரிய பின்னூட்டம்?)//

பின்னூட்டத்திற்கு நன்றி.

ஆம் சகோதரி... சொந்த ஊர் தேவகோட்டைக்கு அருகில். தற்போதைய வாசம் காரைக்குடியில்...
ஊருக்கு சென்று வந்த சந்தோஷம் இன்னும் மனசுக்குள்...
எனது நான்கு வலைப்பூவையும் ஒன்றாய் ஆக்கியாச்சு... மனசு தளத்தில் மட்டுமே புதிய இடுகைகள். அங்கும் வந்து பார்க்கவும். நன்றி.